பதிவு செய்த நாள்
17
நவ
2012
10:11
தென்காசி: தென்காசி கோயில்களில் நாளை (18ம் தேதி) கந்த சஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நடக்கிறது. தென்காசி தென்பழனியாண்டவர் கோயிலில் கடந்த 13ம் தேதி கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. அன்று முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் அபிஷேகம், இரவு தீபாராதனை நடந்தது. விழாவின் 5ம் நாளான இன்று (17ம் தேதி) காலையில் அபிஷேகம், இரவு தீபாராதனை நடக்கிறது. நாளை (18ம் தேதி) காலை 11 மணிக்கு அபிஷேகம், சஷ்டி தீபாராதனை, இரவு சண்முகர் திருவீதி உலா, தீபாராதனை நடக்கிறது. 19ம் தேதி காலையில் அபிஷேகம், இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.குமாரர் கோயில்இலஞ்சி குமாரர் கோயிலில் கடந்த 13ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் காலையில் சுவாமி திருவீதி உலா, அபிஷேகம், அலங்காரம், இரவு தீபாராதனை, சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று காலையில் சுவாமி திருவீதி உலா, அபிஷேகம், தீபாராதனை, மாலையில் அபிஷேகம், தீபாராதனை, இரவு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நாளை காலையில் அபிஷேகம், அலங்காரம், மாலையில் கோயில் கிழக்கு வாயில் பகுதியில் சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம், இரவு சுவாமி மரமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடக்கிறது. 19ம் தேதி மதியம் மூலவர் முழுக்காப்பு, தீபாராதனை, இரவு தெய்வானை திருமணம், பல்லக்கில் சுவாமி திருவீதி உலா, 20ம் தேதி காலையில் முழுக்காப்பு, தீபாராதனை, இரவு ஊஞ்சல் நிகழ்ச்சி நடக்கிறது.ஆய்க்குடி கோயில் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 13ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளல், இரவு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நான்காம் திருநாளான நேற்று காலையில் கணபதி ஹோமம், காமதேனு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, மாலையில் நாதஸ்வர இன்னிசை, இரவு பரதநாட்டியம், குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நடந்தது. இன்று காலையில் ருத்ர ஏகாதசி அபிஷேகம், சுவாமி பச்சை சாத்தி வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வருதல், மாலையில் நாதஸ்வர கச்சேரி, இரவு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நடக்கிறது. நாளை காலையில் ருத்ர ஏகாதசி அபிஷேகம், நாதஸ்வர இன்னிசை, மாலையில் சூரசம்ஹாரத்திற்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், சுவாமி சூரனை வதம் செய்தல், இரவு சிறப்பு வாணவேடிக்கை நடக்கிறது.வரும் 19ம் தேதி காலையில் ருத்ர ஜெபம் அபிஷேகம், ஆராட்டு வைபவத்திற்கு சுவாமி எழுந்தருளல், இரவு நாதஸ்வர கச்சேரி, சப்தாவர்னம், சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளல், நள்ளிரவில் திருக்கொடி இறக்கம் நடக்கிறது.