உற்சாக குளியல் போட்ட தருமபுரம் ஆதீன யானை ஞானாம்பிகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2024 02:08
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சிவலோக தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்திட தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம், சொக்கநாதர் பெருமானுடன் குரு, லிங்க, சங்கமம் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தடைந்துள்ளார். இந்நிலையில் இக்கோயிலுக்கு தருமபுரம் மடத்திற்கு கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி புதிதாக வருகை புரிந்த ஞானாம்பிகை என்ற யானை ஆச்சாள்புரம் கோயிலுக்கு வந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோயில் நந்தவனம் பகுதியில் தடாகம் அமைத்து நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஞானாம்பிகை யானை குதூகலத்துடன் உற்சாக குளியல் போட்டது. இதனை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.