திருவேட்டை அய்யனார் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2024 10:08
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் உள்ள பூரணாதேவி,புஷ்கலா தேவி சமேத திருவேட்டை அய்யனார் சுவாமி கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அக்னி வீரபத்திர சுவாமி,கெங்காயி அம்மன், சமயண சுவாமி வாய்க்கான்கரையான் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை பூர்ணஹூதி முடிவடைந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயில் கோபுரங்களுக்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.அன்னதானமும் நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம் வீரத்தேவர் வகையறாவினர் மற்றும் இளைஞர்கள்,கட்டிக்குளம் மற்றும் மேட்டுமடை கிராம மக்கள்செய்திருந்தனர்.