கோவை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2024 07:08
கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) கோவை கிளை சார்பில் நடைபெற்ற விழாவில் பகவான் ஜகந்நாதர் , பலராமர், சுபத்ரா தேவி ஆகியோர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணர் பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர்.