சீனிவாசப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2024 02:08
போடி; கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் மூலவர் சீனிவாச பெருமாள் குருவாயூர் கிருஷ்ணர் தங்க கவச அலங்காரத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்து பெருமாளின் தரிசனம் பெற்றனர்.
* போடி திருமலாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சலவை கல்லால் ஆன கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரின் தரிசனம் பெற்றனர். குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடம் ராதை வேடம் அணிந்து வந்தனர்.