அவிநாசி; அவிநாசி அருகே ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவில் திருப்பணிகள் மற்றும் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் மற்றும் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் விஷ்வக்ஷேன ஆராதனை, பஞ்சராத்ர ஆகமம், புண்யாகவாசனம் ஆகியவை முதல் கால யாக பூஜையிலும், பாலஸ்தாபனம், திரவியாகுதி மற்றும் பிரசாதம் வழங்குதல் இரண்டாம் கால வேள்வி பூஜையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.