களிமண்குண்டு காந்தாரி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2024 05:08
பெரியபட்டினம்; பெரியபட்டினம் அருகே களிமண்குண்டு கிராமத்தில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலில் மண்டலபிஷேக பூஜை நடந்தது. கடந்த ஜூலை 12 அன்று புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு மண்டல பூஜையில் காந்தாரி அம்மன் கோயில் முன்புறம் யாகம் வளர்க்கப்பட்டது. கும்பத்தில் உள்ள புனித நீரால் கற்பக விநாயகர் காந்தாரியம்மன், தணிகைவேலன், இருளப்பசாமி, ஈஸ்வரி அம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்திலேயே அதிக உயரம் கொண்ட 32 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை களிமண்குண்டு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.