அனுப்பர்பாளையம்; திருப்பூர், பி.என். ரோடு, அண்ணாநகர் தியாகி குமரன் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ சுடலை மகாராஜா மற்றும் ராஜகாளி அம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், பிரம்ம சக்தி, கோவிலின் 18 ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 24 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி இன்று 28ம் தேதி காலை 10:00 மணிக்கு நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். சுடலை மகாராஜா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 12:00 மணிக்கு உச்சி பூஜையை தொடர்ந்து வில்லுப்பாட்டும் இரவு 10:00 மணிக்கு கம்பம் கங்கையில் சேர்த்தல். உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.