திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம்; தேவஸ்தானம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2024 05:08
திருப்பதி; திருப்பதி - திருமலையின் புகழ் உலகப் பிரசித்தி பெற்றது போல் திருப்பதி லட்டு பிரசாதமும் உலகப் புகழ் வாய்ந்தது. திருமலை கோவிலில் தினமும், 2 லட்சம் முதல் 3 லட்சம் லட்டுகள் வரை தயாரித்து, பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் எண் கட்டாயம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசம். ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே கூடுதலாக ஒரு லட்டு ரூ.50 க்கு வழங்கப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.