விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள்; வண்ணம் தீட்டும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2024 11:08
ராஜபாளையம்; ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வண்ணம் தீட்டும் கடைசி கட்ட பணி நடைபெற்று வருகிறது. ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா செப்.1 முதல் 7 வரை நடக்கிறது. இதற்காக பெரிய அளவிலான குரோதி கணபதி ஏற்கனவே விழா திடலுக்கு வந்துள்ள நிலையில் மாயூரநாத சுவாமி கோயில் நுழைவு பகுதியில் அமைந்துள்ள வழிவிடு விநாயகர் கோயில் அருகே சறுக்கு விளையாட்டு கணபதி, லோடு ரிக் ஷா கணபதி, மாருதி கார் கணபதி, கோலாட்ட கணபதி என நான்கு விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. விழா நாட்களில் அன்னதானம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், நாம சங்கீர்த்தனம், நலத்திட்ட உதவிகள், இலவச திருமணம் நடைபெறும். ஏற்பாடுகளை நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.