நெகமம் காலபைரவர், நவகிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2024 07:09
நெகமம்; நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில், காலபைரவர் மற்றும் நவகிரக ஆலய கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நெகமத்தில் உள்ள நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில், பரிவார தெய்வகளான காலபைரவர் மற்றும் நவகிரகங்கள் ஆலய கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று காலை, வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நித்தீஸ்வரர், காலபைரவர், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், நெகமம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து, பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.