கோவை ஞான ஈஸ்வரர் கோவிலில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2024 10:09
கோவை; சாய்பாபா காலனி, கே. கே. புதூர் சின்னம்மாள் தெருவில் உள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆவணி மாதத்தில் வரும் ரிஷி பஞ்சமி தினத்தை முன்னிட்டு கோவிலில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.