சூலுார்; குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். காடாம்பாடி ஊராட்சி குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, கடந்த, 6 ம் தேதி துவங்கியது. சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவிலில் இருந்து கத்தி போட்டு பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். நேற்று காலை, ஆறாம் கால ஹோமம் முடிந்து, புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. வலம்புரி விநாயகர், மாகாளியம்மன், சவுடேஸ்வரி அம்மன், குபேர முருகர் மற்றும் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.