திருப்பாதிரிபுலியூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் பாலாலயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2024 11:09
கடலுார்; திருப்பாதிரிபுலியூர் வீரஆஞ்சநேயர் கோவில் திருப்பணிகள் நடக்க இருப்பதால் சுவாமி பாலாலயம் செய்யப்பட்டது. கடலுார் திருப்பாதிரிபுலியூர் வீர ஆஞ்சநேயர் கோவில் கடந்த 25.8.2013ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் முடிவதால், இந்து சமய அறநிலையத் துறை மூலம் கோவில் திருப்பணிகள் நடைப்பெற்று கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. இதனையொட்டி வீர ஆஞ்சநேயர் சுவாமி பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனையொட்டி வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனைகள் நடந்தது. கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்று சுவாமி பாலாலயம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து கோவில் திருப்பணிகள் துவங்கியது. கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் வளாகத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சுவாதி நாளான நேற்று போடப்பட்ட பூக்கோலம்.