பதிவு செய்த நாள்
09
செப்
2024
11:09
திருப்பூர்; திருப்பூர், குலாலர் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் குலாலர் பிள்ளையார் கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் நிறைவுற்று நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கடந்த, 6ம் தேதி விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ேஹாமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நவக்கிரஹ ேஹாமம், தீர்த்தக்குட ஊர்வலம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தன. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள், சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க சிறப்புடன் நடந்தன. நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, நான்காம் யாக வேள்வி பூஜை துவங்கியது; நிறைவேள்வியை தொடர்ந்து, காலை, 8:15 மணிக்கு, குலாலர் பிள்ளையார் விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 8:30 மணிக்கு, மூலவர் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகளை தொடர்ந்து, குஜராத்தி மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் தலைமையில், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் சிவாச்சாரியார்களால், நாதஸ்வர கலைஞர் சிங்காரவேலு குழுவினரின் மங்கள இசை முழங்க, கும்பாபிஷேகம் சிறப்புற நடந்தது.