பதிவு செய்த நாள்
09
செப்
2024
01:09
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டியில் பாதாள செம்பு முருகன் கோயிலில், சஷ்டியை முன்னிட்டு மூலவர், ஜலகண்டேஸ்வரர், விநாயகர், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கோயில் நுழைவாயிலில் உள்ள 18 அடி உயர கருப்பணசாமிக்கு, 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், விசேஷ பூஜைகள் நடந்தது.
சின்னாளபட்டி; சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், பால், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. மூலவர், உற்சவருக்கு விசேஷ மலர் அலங்காரத்துடன், சிறப்பு பூஜை, மகாதீபாராதனை நடந்தது. செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், தருமத்துப்பட்டி ராமலிங்க சுவாமி கோயிலில், சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.