பதிவு செய்த நாள்
09
செப்
2024
02:09
பல்லடம்; நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என, பல்லடம் அருகே, விநாயகருக்கு பூஜை செய்யும் பணியில் பெண்களும் களம் இறங்கியுள்ளனர்.
பல்லடம் வட்டாரத்தில், ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, பாரத மாணவர் பேரவை உள்ளிட்ட பல்வேறு ஹிந்து இயக்கங்கள் சார்பில், நேற்று முன்தினம், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினசரி வழிபாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளுக்கு, இளைஞர்கள் உட்பட சிறுவர்களும் கூட பூஜை செய்து வருகின்றனர். இவ்வகையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல், பெண்களும், விநாயகருக்கு பூஜை செய்து வருகின்றனர். பல்லடம் அடுத்த, குன்னாங்கல்பாளையம் பிரிவில், ஹிந்து முன்மணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இதற்கு, இப்பகுதியை சேர்ந்த அம்பிகா 40 மற்றும் சுனேனா வள்ளி 14 ஆகிய இருவரும் இணைந்து, விநாயகருக்கு பூஜை செய்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறோம். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகருக்கு பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்ததால், தினசரி, விநாயகருக்கு பிரசாரம் வைத்து வழிபட்ட பின், இங்கு வரும் பக்தர்களுக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்து வருகிறோம். மூன்று நாட்கள் பூஜை முடிந்ததும், நாளை (இன்று) விநாயகர் விசர்ஜனம் செய்த பின், விரதத்தை முடித்துக் கொள்வோம் என்றனர்.