பதிவு செய்த நாள்
09
செப்
2024
04:09
திட்டக்குடி; வையங்குடி லோகநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த வையங்குடி கிராமத்தில் லோகநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் பழமை வாய்ந்தது. பல ஆண்டுகளுக்குப்பிறகு இக்கோவிலில் உள்ள பசுபதீஸ்வரர், லோகநாயகி, நந்தி, சண்டீசர் கருவறை, அர்த்த மண்டபம், விமானம், விநாயகர், தென்முகப்பரமன், அண்ணாமலையார், பிரம்மா, கொற்றவை, நாகர் ஆகிய திருமேனிகளுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த முடிவெடுக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8.30மணிக்கு விமானங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கு தமிழ் முறைப்படி திருமறைகள் ஓதி, கும்பாபிஷேக விழா நடந்தது. ஏராளமான பொதுமக்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.