நாகேஸ்வர ஸ்வாமி கோவிலில் ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2012 12:11
கும்பகோணம்: நாகேஸ்வர ஸ்வாமி கோவில் சார்பில் நடந்த ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.மகா பிரளயம் ஏற்பட்ட காலத்தில் அமிர்த குடம் உடைந்தபோது, வில்வம் விழுந்த இடத்தில் எழுந்தருளி வில்வனேசர் என்ற திருநாமம் பெற்றார் சிவபெருமான். பின்னர் உலகத்தை தாங்கும் சக்தியை இழந்த நாகராஜன் வில்வனேசரை இத்தலத்தில் பூஜித்து அருள் பெற்றார். இதனால் இத்தலத்து பெருமானுக்கு நாகேஸ்வரர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கடைசி நாளில் கடைமுழுக்கு தீர்த்தவாரி வைபவம், காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. அந்த வகையில் நடந்த தீர்த்தவாரியை ஒட்டி ஸ்வாமி அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளினர்.காவிரியில் தீர்த்தவாரி மூர்த்தியான அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் புனித நீராடி, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.