போத்தனூர் மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2024 06:09
போத்தனூர்; இடையர்பாளையம் மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
குனியமுத்தூர் அடுத்து இடையர்பாளையத்திலுள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 12ம் தேதி பூர்வாங்க பூஜைகள் மற்றும் பரிகார வேள்விகளுடன் துவங்கியது. இன்று காலை நான்காம் கால யாக வேள்வி, கலசங்கள் புறப்பாடு நடந்தன. இதையடுத்து மகாலட்சுமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். தொடர்ந்து மகாலட்சுமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் தொடர்ச்சியாக தசதானம், தசதரிசனம். மகாபிஷேகம், ஆன்மிக மகளிர் அணி சிறப்பு பஜனை, அலங்கார தீபாராதனை நடந்தன. மேலும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளானோர் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர். விழாவினையொட்டி அப்பகுதியிலுள்ள பள்ளிவாசல் சார்பில், செயலாளர் நூர்பாஷா தலைமையில் நிர்வாகிகள் சீர்வரிசையாக பழங்களை எடுத்து வந்தனர். கோவில் முன் அவர்களை கோவில் கமிட்டியினர் மாலை மற்றும் கதராடை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றனர். மாலையில் மகாலட்சுமி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நாளை காலை, 9:00 மணிக்கு ஊர் பொங்கல், மதியம், 12:00 மணிக்கு முதல் நாள் மண்டல பூஜை அலங்கார தீபாராதனையும் தொடர்ந்து அன்னதானமும் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோவில் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.