பதிவு செய்த நாள்
15
செப்
2024
06:09
திருப்பூர்; மங்கலம், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிகேசவ பெருமாள், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள், 13ம் தேதி மகா சுதர்ஸன ேஹாமம், விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. யாகசாலை பூஜைகள், பட்டாச்சார்களால் மேற்கொள்ளப்பட்டது. நான்காம் கால வேள்வி பூஜைகளை தொடர்ந்து, நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி, வள்ளி கும்மி, காவடியாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக, சிலை பிரதிஷ்டை பணிகளை, அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்சினி நேரில் பார்வையிட்டார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இஸ்லாமியர்கள் பங்கேற்பு; மங்கலம் பகுதியில், இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். கோவில் நிர்வாகிகள், முறையாக அழைப்பு விடுத்ததால், இஸ்லாமியர்கள் சார்பில், விழாவுக்கு சீர்வரிசை அளிக்கப்பட்டது; கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றது மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை பேணும் வகையில் இருந்ததாக, பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.