திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான கோபுர, விமானங்களுக்கு ஸ்தூபி பாலாலயம் 16 ஆண்டுக்கு பின் நேற்று துவங்கியது. திருப்புத்தூரின் தென் எல்லை காவல் தெய்வமாக பூமாயி அம்மன் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் -2008 ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. 16 ஆண்டுக்கு பின் தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலை மூலவர் சன்னதியில் கலசம் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் கலசம் யாகசாலை புறப்பாடு ஆகியது. தொடர்ந்து பூர்வாங்க பூஜைகள் முடிந்து முதலாம் கால யாகசாலை பூஜை நடந்தது. முன்னாள் தக்கார் தங்கவேலு முன்னிலையில், பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் ரமேஷ், பாஸ்கர் ஆகியோர் பூஜை செய்தனர். முதல் கால யாகசாலை பூஜைக்கு பின் பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை 2 ம் கால யாகசாலை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் விமானம், பரிவார விமானங்கள், கோபுரங்களுக்கு பாலாயம் நடத்தப்பட்டது. ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் பி.எட்., கல்லுாரி செயலர் ராமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.