இக்கோயிலில் ஆக. 18 ல் ஆவணி ஞாயிறு உத்ஸவம் துவங்கியது. தொடர்ந்து ஆவணிஞாயிறு தோறும் காலை 10:00 மணிக்கு மூலவர் மகாலெட்சுமிக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. நேற்று கடைசி ஆவணி ஞாயிறை முன்னிட்டு காலை மூலவருக்கு அபிேஷகம் நடந்து வெள்ளிக்கவச சிறப்பு அலங்காரத்தில் மகாலெட்சுமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் மாலையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற சுமங்கலி திருவிளக்கு பூஜை நடந்தது. உற்ஸவ லெட்சுமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்து விளக்கு பூஜை துவங்கியது. கோவி்நதராஜ் பட்டாச்சார்யார் திருவிளக்கு பூஜையை நடத்தினார். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள், விழாக்குழுவினர் செய்கின்றனர்.