பதிவு செய்த நாள்
16
செப்
2024
11:09
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் இடையபட்டி அருகே மார்க்கம்பட்டி ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுயம்பு காளியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி செப்.10 கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து செப்.11 காசி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், கொடுமுடி,வைகை, அழகர் கோயில் மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.செப்.13 முளைப்பாரி அழைத்து வருதலைத் தொடர்ந்து செப்.10 முதல் செப்.15 வரை 6 நாட்கள் நான்கு கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று யாக பூஜையை தொடர்ந்து புனித தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க சுற்றி வந்து கோவிலின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கருடர்கள் வானத்தில் வட்டமிட அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர். முன்னதாக செப்.14 இரவு முதல் நேற்று வரை இரண்டு தினங்கள் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். மேலும் கும்பாபிஷேக விழாவில் தி.மு.க., ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய பொருளாளர் அழகியண்ணன், அக்னி அம்மன் ஏஜென்சிஸ் உரிமையாளர் டி.ஆர்.திருப்பதி செட்டியார், ஸ்ரீ பாலாஜி மார்டன் ரைஸ் மில் உரிமையாளர் சதாசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், தி.மு.க., மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்லமுத்து, சுந்தரம் ஏஜென்சி சுந்தரம், இ.பி.எஸ்., ஏஜென்சி சுப்பிரமணி, ராம்நாடு செந்தில்குமார், வெங்கடேஸ்வரா கமிஷன் மண்டி உரிமையாளர் பால்சாமி, நவமணி பெட்ரோல் பங்க் உரிமையாளர் கருப்புசாமி,சுப்பிரமணி, வி.எம்.எஸ். மளிகை செந்தில்குமரன், சி.கே.எஸ். பில்டிங் சரவணன், சி.கே.எஸ்.மளிகை வடிவேல், ஈரோடு செல்வராஜ், கோமாளிபட்டி பாலசுப்ரமணி, கோவை சுரேஷ், டாட்டா டெலி சர்வீஸ் பொது மேலாளர் கதிர்வேல், அம்மன் திருமண மண்டபம் சந்திரசேகர், ஸ்ரீ நாட்ராய விலாஸ் மலர் வணிகம் மிராஸ் ராஜேஷ்குமார், சாமி ஏஜென்சீஸ் பத்மநாபன், பெங்களூர் மஞ்சுநாத் கருப்புசாமி, ஆண்டவர் அண்ட் கோ மளிகை நாச்சிமுத்து, ராம்நாடு மணிவேல், அ.தி.மு.க., மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் சீனிவாசன், கலைமகள் பேட்டரி செல்லமுத்து, நாட்ராயன் செக்கு கோமாளிபட்டி, சி.கே.எஸ்., பில்டிங் மூர்த்தி, திருமுருகன் எர்த் மூவர்ஸ் பெரியசாமி, கே.பி.ஹால் மாம்பாறை முனியப்பன் கோவில் தினேஷ், மார்க்கம்பட்டி ஊராட்சி தலைவர் செல்லமுத்து, எல்லப்பட்டி ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணி, கலைமகள் பைனான்ஸ் செல்வராஜ், விழா ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டி, காளிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.