பதிவு செய்த நாள்
16
செப்
2024
12:09
காரைக்கால்; திருநள்ளாறு சனிஸ்வரவாகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நளன்தீர்த்தத்தில் விட்டு செல்லும் துணிகளை பல்வேறு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு என்ற ஊரில் ஸ்ரீதர்பாரண்யேஸ்வர் கோவில் புகழ்பெற்ற சிவாலயமாகும். இக்கோவில் காரைக்காலிருந்து மேற்கு திசையில் 5கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம், மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ளது. தர்பாரண்யேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சுயம்பு மூர்த்தியான மூலவர் திருமுகத்தில் தர்ப்பையால் ஏற்பட்ட ரேகைகள் அதிசயமாக பார்க்கப்படுகிறது. நவகிரகங்களில் ஒருவரான சனீஸ்வரபகவானுக்கு தர்பாரண்யேஸ்ரர் கோவிலில் தனி சன்னதி உள்ளது.இங்கு சனீஸ்வபகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள்புரிகிறார். இக்கோவில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகவிமர்ச்சியாக சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். திருக்கோயிலுக்கு நேரே கிழக்கில் பிரமதீர்த்தம் திருக்குளம்,கோயிலுக்கு தென்பால் உள்ள அம்பிகை சந்நிதிக்கு நேரே சரஸ்வதி தீர்த்தம், இக்குளத்தில் ஒருமண்டலம் நீராடி ஈசனை வழிபட்டால் ஊமையரும் பேசும் ஆற்றலைப் பெறுவர் என்பது நம்பிக்கை. ஆலயத்திற்கு வடமேற்குத் திசையில் புகழ்பெற்ற நளதீர்த்தம் உள்ளது.சனிபகவானை வழிபடவரும் பக்தர்கள் எல்லாரும் நளன் திருக்குளத்தில் நீராடி ஈசனையும்,அம்பிகையும்,சனிபகவானையும் வழிபட்டு எல்லாத்துன்பமும் நீங்கி என்றும் இன்பம் எய்துவர் என்பது ஜதீகம். நளன் குளத்தில் புனிதமானது நீராடுவார் பாவத்தைப் போக்கவல்லது.குளித்த உடைகளை குளங்கரையில் விட்டு விட்டு பின்னர் நீராடி குளக்கரையில் உள்ள விநாயகரை வணங்கி சிதறு தேங்காய் மூன்று முறை தலையை சூற்றி உடைப்பது வழக்கம்.இக்கோவிலுக்கு தினம் பக்தர்கள் வருகின்றனர். ஆனால் சனிக்கிழமைகளில் அதிகாலை 4மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் கூட்ட அதிகமாக இருக்கும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக நளன்குளத்தில் குளிப்பது வழக்கம் பின்னர் குளித்துவிட்டு தங்கள் தோஷங்களை கழிப்பதற்கு உடைகளை கோவில் நிர்வாகம் மூலம் வைக்கப்படும் தொட்டியில் விட்டுசெல்கின்றனர்.
பின்னர் நளன்குளத்தில் உள்ள துணிகளை சுமார் 20க்கு மேற்பட்ட ஊழியர்கள் மூலம் அகற்றப்பட்டு பின்னர் வாகனம் மூலம் புறவழிச்சாலையில் உள்ள வயல்வேலியில் துணிகளை காயவைக்கப்படுகிறது. பின்னர் பக்தர்கள் துணிகளை சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வரும் துணி வியாபாரிகள் புடடை, வேட்டி, சட்டை,பேட் உள்ளிட்ட துணிகளை தரம்பிரிந்து துணிகளை மறுசுழச்சி செய்யப்படுகிறது. மேலும் உள்ள துணிகளை கப்பல், தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு வேஸ்ட்டாக பயன்படுத்தப்படுகிறது.இதனால் பக்தர்கள் விட்டுசெல்லும் துணிகளை ஊழியர்கள் நன்றாக காயை வைத்து பல்வேறு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.