புரட்டாசி பிறப்பு; ராஜகோபால சுவாமி கோவிலில் விஸ்வரூப தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2024 11:09
திருநெல்வேலி; திருநெல்வேலி ராஜ கோபால சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி கோ பூஜையுடன் விஸ்வரூப தரிசனம் நடந்தது.
பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். கருவறையின் மேல்தளத்தில் அழகிய மன்னார் ஸ்ரீதேவி, பூதேவியுடனும், ரிஷிகளுடனும் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலில் இன்று புரட்டாசி மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் கோவிலில், கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.