ஒரு லட்டு 1.87 கோடி ரூபாய்; விநாயகர் சதுர்த்தி படையலுக்கு போட்டி போட்ட பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2024 11:09
ஹைதராபாத்; தெலுங்கானா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் ஒரு லட்டு ரூ.1.87 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.
தெலுங்கானாவில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள் எப்போதுமே களைகட்டும். அங்குள்ள பண்டலகுடா பகுதியில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா பிரபலம். இங்க ஆண்டுதோறும் விழாவின் போது லட்டு படைக்கப்பட்டு பின்னர் அந்த லட்டு ஏலம் விடப்படும். அதன்படி சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் இந்த ஆண்டும் அதே நடைமுறை பின்பற்றப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். கடும் போட்டிக்கு இடையே ஏலத்தில் இந்த லட்டு ரூ.1.87 கோடிக்கு விலை போனது. இது கடந்தாண்டை விட ரூ.61 லட்சம் அதிகமாகும். யார் இந்த லட்டை வாங்கி உள்ளார் என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.