ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் விஸ்வரூப சேவை; மங்கள ஆரத்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2024 12:09
திருச்சி; ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் விழாவில் இன்று விஸ்வரூபம் சேவை, மங்கள ஆரத்தி நடைபெற்றது.
பவித்ரோத்ஸவம் என்பது புனிதப் படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம் மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம். இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும். இவ்விழாவானது ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் ஆவணி 29ம் தேதி (14.09.2024) சனிக்கிழமை துவங்கியது. புரட்டாசி மாத பிறப்பு மற்றும் பவித்ரோத்ஸவம் 4ம் நாளான இன்று காலை நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நடைபெற்று, திருப்பவித்ரோத்ஸவ மண்டபம் சேர்ந்தார். அங்கு விஸ்வரூபம் சேவை மற்றும் மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.