புரட்டாசி பவுர்ணமி; திருவண்ணாமலையில் இரண்டாம் நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2024 10:09
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையிலுள்ள மலையையே பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., துாரமுள்ள மலையை வலம் வந்து வழிபட்டு செல்கின்றனர். இதில், புரட்டாசி மாத பவுர்ணமி திதி நேற்று காலை, 11:22 முதல், இன்று காலை, 9:10 மணி வரை உள்ளதால், நேற்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கோவிலில், 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து சென்றனர்.