புரட்டாசி பவுர்ணமி; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரருக்கு பேரொளி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2024 10:09
கோவை; ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி திதி சிறப்புக்குரியதாகும். ஆனால் பவுர்ணமி வரும் மாதங்கள் மற்றும் கிழமைகளின் அடிப்படையில் அதன் சிறப்புகள் மட்டுமின்றி, வழிபாட்டு பலன்களும் மாறுபடும். அதிலும் இந்த ஆண்டு புரட்டாசி மாதப்பிறப்பு நாளுடன் பவுர்ணமி இணைந்து வந்திருப்பது கூடுதல் சிறப்புக்குரியதாகும். புரட்டாசி மாத பவுர்ணமியில் பெருமாளையும், குலதெய்வங்களையும் மனதார வழிபட்டு வந்தால் மகத்தான பலன்களைப் பெறலாம். அந்த வகையில் கோவை மதுக்கரையில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள சிவபெருமானுக்கு பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டது சிறப்பு பூஜை நடைபெற்றது. ஐந்து விதமான பஞ்ச தீபங்கள் ஏற்றப்பட்டு சிவனுக்கு சிறப்பு பேரொளி வழிபாடு நடத்தப்பட்டது. இந்த பேரொளி வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிவபெருமானை ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று சரண கோஷம் எழுப்பி வழிபட்டுச் சென்றனர். புரட்டாசி மாதங்களில் வரக்கூடிய எல்லா தினங்களுமே சிறப்பான தினங்கள்தான். அதிலும் இந்த புரட்டாசி பவுர்ணமி என்பது மிக மிகச் சிறப்பான ஒரு நாளாக கருதப்பட்டது. சைவ வைணவ ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் இந்த நாளில் நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.