ராமேஸ்வரம்; புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமசேது மகாசமுத்திர ஆரத்தி குழு அக்னி தீர்த்த கடற்கரையில் மகா ஆரத்தி பூஜை நடத்தினர். உலக நன்மைக்காக ஒவ்வொரு பவுர்ணமி தினத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ராமசேது மகா சமுத்திர ஆரத்தி குழுவினர் ஆரத்தி பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். அதன்படி நேற்று புரட்டாசி பவுர்ணமி யொட்டி புரோகிதர்கள் மகா ஆரத்தி பூஜை நடத்தி வழிபட்டனர். இதில் புதுச்சேரி குமாரசுவாமி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், சமுத்திர ஆர்த்தி குழு நிர்வாகி நாகராஜ், ராமேஸ்வரம் கம்பன் கழக பொருளாளர் ராமு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.