கழுமரம் விநாயகர் கோவிலில் வழிபடபடும் மாகாவீரர் சிற்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2024 11:09
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த கழுமரம் கிராமத்தில் விநாயகர் கோவிலில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் வழிபாட்டில் உள்ளது.
இது குறித்து எழுத்தாளர் விழுப்புரம் செங்குட்டுவன் கூறியதாவது; திருக்கோவிலூர் அடுத்த கழுமரம். வடக்கு வீதியில் உள்ள விநாயகர் கோவிலில் சமண சமயத்தின் 24 வது தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பம் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இங்கு மகாவீரர் அமர்ந்த கோலத்திலும், அவரது தலைக்கு மேலே முக்குடை காட்டப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்களிலும் சாமரதாரிகள் சாமரம் வீசுகின்றனர். இதன் காலம் கி.பி., 10 - 11 ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என புதுச்சேரி கல்வெட்டு ஆய்வாளர் விஜய வேணுகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். இப்பகுதியில் சமண கோவில் இருந்து பின்னர் மறைந்திருக்கலாம். இது சமண சிற்பம் என அறியாமலேயே விநாயகர் கோவிலுக்குள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு கூறினார் செங்குட்டுவன்.