திருப்பதியில் கருட சேவை கோலாகலம்; பெருமாளை தரிசித்து பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2024 10:09
திருப்பதி; திருமலையில் இந்த ஆண்டு அக்டோபர் 4 முதல் 12ம் தேதி வரை ஸ்ரீவாரி பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ள நிலையில் நேற்று புதன்கிழமை மாலை பெளர்ணமியை கருட சேவை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பது புண்ணியமானதாக கருதப்படுகிறது. புரட்டாசியில் பெருமாளின் கருட வாகன சேவையை தரிசிக்க திருமலையில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். திருப்பதியில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நாளன்று கருட சேவை உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று புதன்கிழமை மாலை பெளர்ணமியை கருட சேவை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடந்த இந்த கருட சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை கோவிந்தா கோஷத்துடன் வழிபட்டனர்.