விருதுநகர்; விருதுநகரில் இஸ்கான் புரட்டாசி திருவிழா தென்மண்டல செயலாளர் சங்கதாரி பிரபு தலைமையில் நடந்தது. இதற்காக மதுரையில் இஸ்கான் கோயிலில் இருந்து கிருஷ்ண பலராமரின் உற்ஸவ சிலைகள் வரவழைக்கப்பட்டு, அபிஷேகம், தீபாராதனை, ஹரிநாம சங்கீர்த்தனம், ஹரே கிருஷ்ண மகா ஜபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கிருஷ்ணர், பலராமர், ராமர், சீதை, ராதை, ஆண்டாள் உள்ளிட்ட வேடமணிந்த குழந்தைகளுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் 108 மணி ஜப மாலைகள், பகவத் கீதை, கிருஷ்ணா புத்தகம், ஸ்ரீமத் பாகவதம் ஆகியவை வழங்கப்பட்டது.