லட்டு சர்ச்சை.. தோஷம் விலக வீடுகளில் விளக்கேற்றுங்கள்; திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2024 04:09
திருப்பதி; திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலந்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் கோவிலின் புனிதத்தை மீட்பதற்காக இன்று சாந்தி ஹோமம் நடைபெற்றது. ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திர தினமான இன்று வேத விற்பன்னர்கள் கோவிலில் சாந்தி ஹோமம், பல்வேறு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். இந்நிலையில் கோவிலில் ஏற்பட்ட தோஷம் விலக இன்று மாலை 6 மணிக்கு பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, மந்திரம் படித்து வழிபடுமாறு திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.