Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதோஷம்; போடி சிவன் கோயில்களில் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா 3ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா 3ம் தேதி துவக்கம்

பதிவு செய்த நாள்

30 செப்
2024
05:09

சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. அப்போது, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் பிரமாண்ட கொலு வைக்கப்படுகிறது.


மேற்கண்ட நாட்களில், முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரை, அம்மன் கொலு சன்னதியில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்க உள்ளன. தினமும் மாலை 5:00 முதல் 7:00 மணி வரை லலிதா சகஸ்ரநாம, வேத, திருமுறை பாராயணங்கள், மகளிர் கொலு பாட்டு நடக்கிறது. வரும் 4ம் தேதி மாலை 4:15 மணிக்கு மகளிரின் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது. அக்., 6ம் தேதி திருமுறை பாராயணம் மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடக்கிறது.


ஏகதின லட்சார்ச்சனை; மீனாட்சி அம்மன் உற்சவருக்கு ஏகதின லட்சார்ச்சனை அக்., 11ம் தேதி காலை 7:30 மணிக்கு துவங்கி பகல் 12:30 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் நடக்கிறது. இதில், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அர்ச்சனை ஒன்றுக்கு, 250 ரூபாய் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். லட்சார்ச்சனை முடிவில் அம்பாளின் பிரசாதம் வழங்கப்படும்.


கொலு தரிசனம்; நவராத்தி கொலுவின் ஒவ்வொரு நாளும் மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சி நடக்கிறது. சக்தி கொலுவை, பக்தர்கள் காலை 6:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும் மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் பார்வையிடலாம். கொலுவில் உற்சவர் அம்மனுக்கு, அந்தந்த நாளுக்கு உரிய சிறப்பு அலங்காரம் செய்து, வழிபாடு நடத்தப்படும். கொலுவில் அம்மனை தரிசித்து வரும் பக்தர்களுக்கு தினமும் பிரசாதம் வழங்கப்படும். கண்காட்சி நேரத்தில் ஆன்மிக வினாடி – வினா நடத்தப்படும். அதில் பங்கேற்போருக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.


வித்யாரம்பம் நிகழ்ச்சி; நவராத்திரியின் நிறைவு பகுதியாக வரும் 12ம் தேதி, விஜயதசமி அன்று ‘வித்யாரம்பம்’ எனும் நிகழ்ச்சி, காலை 7:00 மணி முதல் பகல், 12:00 மணி வரை நடத்தப்படுகிறது. இதில், இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளின் விரல் பிடித்து, தொடக்கக் கல்வியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 68 வது பீடாதிபதி சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரையில் பை பாஸ் நால் ரோடு சந்திப்பு பகுதியில் நீலிமலை அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஈச்சனாரி விநாயகர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு ... மேலும்
 
temple news
கடலுார்; திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், தருமபுரம் ஆதினம் தரிசனம் செய்தார்.கடலுார் ... மேலும்
 
temple news
திருப்போரூர்; செங்கல்பட்டு, திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar