பதிவு செய்த நாள்
01
அக்
2024
10:10
முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட சொந்தவீடு அமையும். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை என்றாலே, ஏதோ வேண்டா வெறுப்பாக ஒதுக்கப்படும் நாளாகக் கருதுகின்றனர். உண்மையில், இது ஒரு புண்ணியக்கிழமை. அதிலும், செவ்வாய்க்கிழமையும், தேய்பிறை சதுர்த்தசி திதியும் சேர்ந்தால், அது சாபங்களைத் தொலைக்கும் நன்னாளாக அமையும். நிலம் வாங்க விரும்புவோருக்கு, ஜாதகத்தில் செவ்வாய் பலம் வேண்டும் என்பர். செவ்வாயை வழிபட ஏற்ற நாள், இந்நாளில் பிதுர் தேவதைகளை வணங்குவதுடன், கடல், ஆற்றங்கரையோர தலங்களுக்கு சென்று, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த சாபங்கள் தீர்வதற்கென்றே உள்ள ஹோமங்களை வேதியர்கள் மூலம் செய்ய வேண்டும். இதனால், முன்னோர் பாவம் நம்மைத் தொடராது. இந்நாளில், குலதெய்வ வழிபாடும் மிக முக்கியம்.
செவ்வாய் கிழமை உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங்களில் மங்கல நிகழ்ச்சி நடத்த தயங்குவதில்லை. முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட சொந்தவீடு அமையும். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இன்று பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றறுவோம்!