பதிவு செய்த நாள்
30
செப்
2024
10:09
சோமவார பிரதோஷம், சிவராத்திரி சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, சொர்க்கலோக பாக்கியம் கிடைக்கும். ஒருவரது 21 தலைமுறைகளும் நற்கதி தருவது சிவராத்திரி வழிபாடு. பிரதோஷமான இன்று சிவனை வழிபட கேட்டது உடனே கிடைக்கும். இன்று பக்தியுடன் வழிபட்டால் பரமன் அருள் நிச்சயம் கிடைக்கும்.
சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று பொருள். சிவராத்திரி விரதம் இருந்தால் குடும்பத்தில் நன்மை பெருகும். கோயில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்யலாம். ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். இன்று ஈசனை வழிபட நல்லதே நடக்கும். துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். பிரதோஷத்தில் நரசிம்மரை வழிபட கேட்டது உடனே கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது நல்லது.
சிவனேனு இரு என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?.. சிந்தனையை ஒருமுகப்படுத்தி இறைநினைப்பில் இருக்க வேண்டும் என்பதையே சிவனே என்றிரு என்று பெரியவர்கள் குறிப்பிட்டனர். திருமந்திரத்தில் திருமூலர், சிவ சிவ என்றிட தீவினை மாளும் என்கிறார். அவ்வையார், சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்று குறிப்பிடுகிறார். இன்று சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை!