பதிவு செய்த நாள்
03
அக்
2024
05:10
நரிக்குடி; நரிக்குடி எஸ்.கல்விமடை கிராமத்தில் திருநாகேஸ்வரமுடையார், திருநாகேஸ்வரி தாயார் கோயிலில் 11 வகையான மலர்கள் கொண்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவர், உற்சவ மூர்த்திகளான சிவபெருமான், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகை உள்ளிட்ட 2 டன் எடையுள்ள 11 வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டு, சிவபெருமான் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. சுவாமி பூ பல்லக்கில் முளைப்பாரியுடன் வீதி உலா நடந்தது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் உரிமையாளர்கள் சார்பாக 2 நாள் அன்னதானம் நடந்தது.