செஞ்சி; செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் நடந்த சிவஜோதி மோன சித்தர் அவதார திருநாள் விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த செத்தவரை சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் சிவஜோதி மோன சித்தர் அவதார திருநாள் விழா நடந்தது. அதனையொட்டி இன்று அதிகாலை 4:00 மணிக்கு மங்கள இசை, 5:00 மணிக்கு கோ பூஜை, 6:00 மணிக்கு சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், 7:00 மணிக்கு சிறப்பு தரிசனம் நடந்தது. 8:00 மணி முதல் 11:00 வரை 108 மூலிகைகளால் மகா ஹோமம், 11:00 மணிக்கு மோன சித்தருக்கு சிவனடியார்கள் கலசாபிஷேகம் செய்தனர். 12:00 மணிக்கு மலர் அபிஷேகம், 1.00 மணிக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து சிவஜோதி மோன சித்தர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.