திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2024 05:10
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளில் புஷ்பவள்ளி தாயார் கொலு மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 9:00 மணிக்கு, புஷ்பவள்ளி தாயார்க்கு விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு புஷ்பவள்ளி தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, கெலுமண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மூலவர் தேகளீச பெருமாள் சூடிக்கொடுத்த மாலை மேளதாளம் முழங்க கொண்டு வரப்பட்டு, தாயாருக்கு அணிவிக்கப்பட்டது. நான்காயிர திவ்ய பிரபந்தம், வேத பாராயணம், விசேஷ பூஜைகள், சான்றுமறை, பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. இரவு 9:00 மணிக்கு சுவாமி மூலஸ்தானம் எழுந்தருளினார். ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் உத்தரவின் பேரில், தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.