நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2024 05:10
சிவகங்கை; தேவஸ்தானத்திற்குட்பட்ட நாட்டரசன்கோட்டை பூமிநீளா அலர்மேல் மங்கை சமேத வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9:15 முதல் 10:25 மணிக்குள் கோயில் கொடிமரத்தில், கொடியேற்றி வைத்தனர். மாலை யாகசாலை ஆரம்பமானது. பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு தினமும் வெங்கடாஜலபதி பெருமாள் சிம்மம், அனுமன், தங்க கருட சேவை, சேஷ, யானை, குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருவார். விழாவின் பத்தாம் நாளான அக்., 13 அன்று காலசாந்தி ேஹாமம், கண்ணுடைய நாயகி அம்மன் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அக்., 14 அன்று காலை 10:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் பிரமோத்ஸவ விழா நிறைவு பெறுகிறது. தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். //