Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ... வடபழனி ஆண்டவர் சக்தி கொலு; மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்பாள் வடபழனி ஆண்டவர் சக்தி கொலு; மீனாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்காதேவி கோயிலில் சதசண்டிஹோமம்
எழுத்தின் அளவு:
அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்காதேவி கோயிலில் சதசண்டிஹோமம்

பதிவு செய்த நாள்

04 அக்
2024
05:10

மயிலாடுதுறை ; மயிலாடுதுறை அருகே கருவாழக்கரையில் மகாசதாசிவபீடத்தில் எழுந்தருளியிருக்கும் அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்காதேவி கோயிலில் நவராத்திரியையொட்டி சதசண்டிஹோமம் தொடங்கியது. 

திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சதசண்டிஹோமம் தொடங்கி மதியம் பூர்ணாஹுதி நடந்தது. தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் அருளாசி வழங்கி பேசுகையில்; உலகம் சேமமாக இருக்க வேண்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் என்பதற்காக அம்பாள் 9 நாட்கள் விரதம் இருந்து அசூரனை வதம் செய்ததை நாம் நவராத்திரியாக கொண்டாடுகின்றோம். பசுவில் அனைத்து தெய்வங்களும் இருப்பதால் பசுவை போற்றி வணங்கினால் பெரும் புண்ணியம் கிடைக்கும். அதனால் பசுக்களை போற்றி பாதுகாக்க வேண்டும். பசுவை உண்பது பெரிய பாவம். மனித வாழ்வில் பாவம், புண்ணியம், கர்மான, விணை என்றால் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கு வரும். பாவம் செய்தால் துண்பத்தை அனுபவிப்போம். புண்ணியம் செய்தால்               மகிழ்ச்சியாக வாழலாம். நம்மால் முடித்தவரை அனைவரும் உதவி செய்ய வேண்டும். பசுவிற்கு கைபிடி புள் கொடுத்தாலே பெரிய புண்ணியம் கிடைக்கும். ஆயிரக்கணக்கான பசுக்களை கோசாலையில் பாதுகாக்கின்றனர். பசுவிற்கு வழிபாடு செய்து உணவு கொடுத்தால் நமது விணைகள் தீரும். நம்மாள் முடிந்தவரை பிறருக்கு உணவு வழங்க வேண்டும். வேதஆகமங்களை கற்றுணந்த சிவாச்சாரியார்களிடம் பாவம், புண்ணியம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சைவசித்தாந்தத்தை அனைவரும் படிக்க வேண்டும். பசு என்றால் உயிர்கள். உலகில் உள்ள உயிர்களை நம்மாள் கணக்கிட முடியாது. பாவ, புண்ணியத்தை பொறுத்து நம்மை இறைவன் படைக்கின்றார். பஞ்சபூதங்களால் உலகம் இயங்கிகொண்டு இருக்கிறது. இறைவழிபாட்டால் தான் உலகத்தில் நிம்மதியாக வாழமுடியும் என்றார். எந்த உயிர்களுக்கும் துன்பம் கொடுக்காமல் நாம் வாழவேண்டும். மனிதபிறவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வாழவேண்டும் என்றார். இதில் சிவபுரம்வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாதசிவாச்சாரியார், முதல்வர் ஸ்ரீகண்டகுருக்கள், திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள்,முன்னாள் எம்.எல்.ஏ.ராதாகிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர், டாக்டர் செல்வம், வணிகர் சங்க பொறுப்பாளர் தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar