Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்காதேவி ... திருப்பதி பிரம்மோற்சவம்; சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி உலா திருப்பதி பிரம்மோற்சவம்; சின்ன சேஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் சக்தி கொலு; மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்பாள்
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் சக்தி கொலு; மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்பாள்

பதிவு செய்த நாள்

04 அக்
2024
11:10

சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான விழா, நேற்று துவங்கியது.

முதல் நாள் விழாவில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார். இரண்டாம் நாளான இன்று முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரையிலும், சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது. மாலை ‘சக்தி’ கொலுவில் அம்பாள் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை லலிதா சகஸ்ரநாம, வேத பாராயணம் நடந்தது. மகளிர் குழுவினர் கொலு பாட்டு பாடப்பட்டது.

இன்று மாலை லாஸ்யா நடன நிறுவன மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, பேபி திவ்யாவின் பக்திப்பாடல் கச்சேரி நடந்தது. சக்தி கொலுவை ரசித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, அம்மன், முருகன், நுால், விபூதி, குங்குமம், அர்ச்சனை பிரசாதம் அடங்கிய பை வழங்கப்பட்டது.

இந்தாண்டு சிறப்பு; வடபழனி ஆண்டவர் கோவில் சக்தி கொலுவில், இந்தாண்டு சிறப்பாக பிரசித்தி பெற்ற கோவில்களின் மூலவர் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர், அயோத்தி ராமர், திருபுவனம் சரபேஸ்வரர், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், காஞ்சிபுரம் உலகளந்தபெருமாள் ஆகியோர், சக்தி கொலுவில் தத்ரூபமாக அருள்பாலிக்கின்றனர்.குறிப்பாக, அயோத்தியில் ராமர் கோவில் உள்ள ராம் லல்லாவின் மூலவர் விக்ரஹர சிலை சக்தி கொலுவில் தத்ரூபமாக இருப்பதால், பக்தர்கள் பார்வை ராம் லல்லாவை விட்டு அகல மறுக்கின்றன. மேலும், குறி சொல்லும் அம்மன், வெற்றிலை அம்மன், குழந்தை அம்மன், மீனாட்சி அம்மனின் மூல விக்ரஹங்கள் பக்தர்களை கவர்ந்து வருகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெரம்பலுார்; அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 11:00 ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘ஆன்மிக தத்துவங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாதவர்கள், ஸ்ரீஆதிசங்கரரின் கிரந்தங்களை ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நடைபெறும் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று காலை இரண்டாம் பிரகாரத்தில் யாகசாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar