Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சோமவாரம்; கோவை ... உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா விமரிசை உத்திரமேரூர் துர்க்கை அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; திருத்தணியில் போக்குவரத்து நெரிசல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; திருத்தணியில் போக்குவரத்து நெரிசல்

பதிவு செய்த நாள்

07 அக்
2024
11:10

திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.


நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிகாலை 5:30 மணி முதலே, மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொதுவழி தரிசனத்தில், 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று வழக்கத்திற்கு மாறாக, வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், தேர்வீதியில் கடும் வெயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் மூலவரை தரிசிக்க காத்திருந்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மலர் காவடிகளுடன் நேர்த்திக்கடனை செலுத்தினர். பெரும்பாலான பக்தர்கள் பேருந்து, கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் மலைப்பாதை வழியாக வந்ததால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் மலைப்பாதை மற்றும் அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க முடியாமல் போலீசார் திணறினர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் தங்கத்தேரில் எழுந்தருளி, தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar