Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முட்டகுறிச்சி பத்ரகாளி அம்மன் ... திருமலையில் குடிசை நன்கொடை கொள்கை திருமலையில் குடிசை நன்கொடை கொள்கை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் அம்மனுக்கு குடம் குடமாக பாலபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் அம்மனுக்கு குடம் குடமாக பாலபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2026
05:04

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்திய நிலையில் குடம் குடமாக பாலபிஷேகம் செய்யப்பட்டது.


இங்கு பங்குனி திருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கி, முக்கிய விழாவாக மின் தீப தேரில் உத்திரத்தன்று அம்மன் உலா வந்தார். நேற்று கொடி இறக்கப்பட்டது. இன்று காலை 4:00 மணி தொடங்கி வைகை ஆற்றில் இருந்து 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர். மேலும் இளநீர் காவடி எடுத்தும், வேல் குத்தியும் சக்தி கோஷம் முழங்க பரவசத்துடன் சென்றனர். குழந்தைகள் தொடங்கி ஆண் மற்றும் பெண் பக்தர்கள் என அம்மன் அருள் வந்து ஆடி சென்றனர். 10:30 மணி வரை பால்குடங்கள் கோயிலை அடைந்த நிலையில், அம்மனுக்கு அனைத்து வகையான அபிஷேகம் நடந்தது. மேலும் பக்தர்கள் சுமந்து சென்ற பால் குடம் குடமாக மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு அம்மன் சயன திருக்கோலத்தில் பூ பல்லக்கில் திருவீதி உலா வந்தார். பரமக்குடி டி.எஸ்.பி., ஜெபராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து விழா நாட்களில் மாவிளக்கு ஏற்றியும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் வழிபட்டனர். கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் ஏற்பாடுகளை செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar