Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் ... பழநி முருகன் கோயிலுக்கு வந்த பொள்ளாட்சி பறவை காவடி பழநி முருகன் கோயிலுக்கு வந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் பங்குனி தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் பங்குனி தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2026
04:04

சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது.


ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயிலில் மார்ச் 26 அன்று தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா துவங்கியது. அன்று மாலை அம்மனுக்கு காப்பு கட்டினர். பக்தர்களும் கைகளில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். விழாவை முன்னிட்டு 8 நாட்களாக அம்மன் கேடகம், சிம்மம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்தார். பங்குனி விழாவின் ஒன்பதாம் நாளான இன்று அதிகாலை 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் வெட்டுடையார் காளி எழுந்தருளினார். தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இன்று காலை 9:40 மணிக்கு தேர் தடத்தில் சிதறு தேங்காய் உடைத்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது. தேருக்கு முன்பாக சப்பரத்தில் விநாயகர் உற்சவம் நடந்தது. பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷம் முழங்க தேர் நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து காலை 10:05 மணிக்கு நிலையை அடைந்தது. தாசில்தார் லெனின், கோயில் நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் தலைமையில் தேரோட்டம் நடைபெற்றது. காளையார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar