சபரிமலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 6.65 லட்சம் கேன் அரவணை பிரசாதம்; உரமாக மாற்ற முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2024 04:10
கம்பம்; சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 6.65 லட்சம் கேன் அரவணை பாயாசத்தை உரமாக மாற்ற தேவசம் போர்டு டெண்டர் கோரியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதமான அரவணை பாயாசத்தில் பயன்படுத்தப்பட்ட ஏலக்காய்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கதிகமாக பூச்சி மருந்துகள் உள்ளதாக கூறி கடந்தாண்டு கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அரவணை பாயாசம் விற்க ஐகோர்ட் தடை விதித்தது. . ஆனால் உச்ச நீதிமன்றம் ஆய்வக அறிக்கையை சுட்டிக்காட்டி விற்க அனுமதி வழங்கியது. இருந்த போதும் ௹.5.5 கோடி மதிப்புள்ள 6.65 லட்சம் அரவணை பாயாக கேன்களை தேவசம் போர்டு விற்பனை செய்யவில்லை. தற்போது அதை எவ்வாறு டிஸ்போஸ் செய்வது என்று ஆலோசனை செய்தது. பக்தர்களின் மனம் புண்படாதபடி இருக்க வேண்டும் என்பதற்காக வனப்பகுதியில் கொட்ட முடிவு செய்தது. ஆனால் வனத்துறை ஆட்சேபம் தெரிவித்தது. எனவே விஞ்ஞான முறையில் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் டிஸ்போஸ் செய்ய டெண்டர் கோரியது. கேரளாவை சேர்ந்த சென்ட்ரிபியூச் இன்ஜினியரிங் சொலுயூசன் என்ற நிறுவனம் அந்த டெண்டரை எடுத்துள்ளது. அந்த நிறுவனம் அரவணை பாயாச டின்களை ஐதராபாத்தில் உள்ள தங்களது ஆலைக்கு கொண்டு சென்று உரமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அரவணை பாயாசம் அரிசி மற்றும் கருப்பட்டியால் செய்யப்படுகிறது. கடந்த சீசனில் தேவசம் போர்டுக்கு அரவணை பாயாசம் விற்ற வகையில் ௹. 147 கோடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.