ராமேஸ்வரத்தில் பாசி படிந்த ராமர் தீர்த்தம்: பக்தர்கள் அதிருப்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2024 12:10
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் ராமர் தீர்த்தக்குளம் பராமரிப்பு இன்றி பாசிபடிந்து கிடப்பதால் சுகாதாரமற்ற நிலையில் பக்தர்கள் நீராடி செல்கின்றனர்.
ராமேஸ்வரம் கோயிலில் இருந்து 1 கி.மீ.,ல் ராமர் தீர்த்தக் குளம் உள்ளது. அக்காலத்தில் கோயிலுக்கு வெளியில் உள்ள தீர்த்தங்களை பக்தர்கள் நீராடி விட்டு கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுவது வழக்கம். இந்நிலையில் ராமர் தீர்த்த குளம் கடந்த சில மாதங்களாக பாசிபடிந்து பச்சை நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இதனால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடி செல்கின்றனர். தீர்த்தக்குளத்தை சுத்தம் செய்ய வேண்டும். கோடையில் மழை பெய்யாததால் ராமர் தீர்த்தத்தில் தண்ணீர் இன்றி மாசடைந்தது. இதனால் தீர்த்தம் பாசி படிந்து உள்ளது என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.