சோமனூர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அம்பு சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2024 10:10
சோமனூர்; சோமனூர் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த அம்பு சேவையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்தி கடன் செலுத்தினர். சோமனூர் சேடபாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, அம்பு சேவை விழா கடந்த, 10 ம்தேதி சக்தி அழைத்தலுடன் துவங்கியது. மறுநாள் அம்மன் திருவீதி உலா நடந்தது. 12 ம்தேதி அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்பு சேவை நடந்தது. மாலை அலங்கார பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாவிளக்கு, முளைப்பாலிகை, பால்குடங்கள், சீர் வரிசை எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.